வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை எப்போது? அமைச்சர் முத்துசாமி தகவல்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (10:54 IST)
சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ரயில் சேவை தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக பல பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது
 
இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் வரும் மார்ச் மாதம் முதல் இந்த சேவை தொடங்கும் என்று முத்துசாமி தெரிவித்துள்ளார்
 
இந்த ரயில் சேவையை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்