தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை எழுந்துள்ளதால் டெல்லி சென்று கோரிக்கை வைக்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டங்கள்தோறும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாது பொது இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடிக்கடி தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியுள்ள மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய நாளை மறுநாள் டெல்லிக்கு சென்று கோரிக்கை வைக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.