டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (12:05 IST)
அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் நடப்பாண்டு 2 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு கூடுதலாக டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும், நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு உள்ளிட்ட மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
டெங்கு போன்ற நோய்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், சுகாதாரத்துறையுடன் இணைந்து உள்ளாட்சி பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், 16,005 கொசு ஒழிப்பு புகை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
4, 631 பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர் என்றும், தமிழகம் முழுவதும் நாளை 1000 சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட உள்ளன என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்