டெங்கு நோயாளிகளின் விவரங்களை தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்: சுகாதாரத்துறை உத்தரவு

வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:18 IST)
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரத்தை சுகாதாரத் துறைக்கு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு தெரிவிக்காத மருத்துவர்களுக்கு சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. 
 
 மேலும் டெங்கு காய்ச்சல், கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் தனி நபர்கள் நிறுவனங்கள் கடை உரிமையாளர்கள் மீதும் அபராதம் விதிக்க பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்