தெலுங்கு தெலிது தமிழில் மாட்லாடு – கலாய்த்த அமைச்சர் ஜெயக்குமார்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (21:11 IST)
சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை குறித்த விவாதத்தில் தெலுங்கில் பேசிய எம்.எல்.ஏவிடம் “தெலுங்கு தெலிது.. தமிழில் மாட்லாடு” என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் மானியக்கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றது அப்போது பேசிய தளி தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ் தெலுங்கு கலந்த தமிழில் பேசி வந்தார். சிறிது நேரத்திற்கு பிரகு முழுவதும் தெலுங்கிலேயே பேச தொடங்கிவிட்டார். அதனால் பலருக்கு அவர் கூறியது புரியவில்லை. அதனால் சபாநாயகர் “இங்கே மொழிமாற்ற ஆட்கள் இல்லை. மேலும் நீங்கள் தெலுங்கில் பேசினால் அது அவை குறிப்பில் பதிவாகாது. அதனால் தமிழிலேயே பேசுங்கள்” என்றார்.

அதற்கு பிறகும் அவர் தெலுங்கிலேயே பேசவும், எழுந்த அமைச்சர் ஜெயக்குமார் ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல மொழிகள் தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது. தெலுங்கு தெலிது அதனால தமிழில் மாட்லாடு” என அவருக்கு தெரிந்த தெலுங்கை கலந்து பேசினார்.

இதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பு சத்தமாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்