இன்று காலை முதல், அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவதை அடுத்து, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உடன் அமைச்சர் துரைமுருகன் அவசர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பி ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில், அந்த வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சருடன் ஆலோசனை முடிந்த பிறகு, அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.