4 நாட்களுக்கு பலத்த காற்று; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (13:10 IST)
அடுத்த நான்கு நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10 முதல் 12 வரையிலான தேதிகளில் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மன்னார் வளைகுடா, வங்கக்கடலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்