அக்டோபர் 9 வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை: அதிரடி உத்தரவு

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2022 (10:58 IST)
அக்டோபர் 9 வரை திருச்சியில் பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 9ஆம் தேதி வரை அனுமதியின்றி பொதுக்கூட்டம் ஊர்வலம் ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் 
 
இந்த உத்தரவை மீறி பொதுக்கூட்டம் மற்றும் ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதி பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 4 இன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திருச்சி காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்