காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம்! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (11:17 IST)
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது தாமதமாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி கரையை கடந்த நிலையில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெற்கு வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்