நள்ளிரவில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நடமாட்டம் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

J.Durai
வியாழன், 7 மார்ச் 2024 (12:54 IST)
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிவசக்தி நகர்  நகரில், சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 
 
இந்த குடியிருப்புகளில் பெரும்பாலும் வயோதிகர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களின் மகன்கள், மகள்கள் சென்னை மற்றும் பெங்களூரு பகுதிகளில் பணிபுரிந்து வருகின்றனர்
 
இந்நிலையில்  நள்ளிரவு அந்த பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற வேளாண்மை துறை அதிகாரி கண்ணதாசன் என்பவர் வீட்டையும், அவரது எதிர்வீடான ஓய்வுபெற்ற மீன்வளத்துறை அதிகாரி சுந்தரேசன் என்பவர் வீட்டையும், முகமூடி அணிந்த 3 நபர்கள் நீளமான தடிகளுடன் புகுந்து வீட்டின் முன் கதவின் பூட்டை உடைக்க முயற்ச்சி செய்துள்ளனர்.
 
இதனால் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு சுந்தரேசன் எழுந்து மின் விளக்கை ஒளிரசெய்ததால் கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே பெரும் பீதியை எழுப்பி உள்ளது. 
 
கடந்த ஒரு வார காலமாகவே இது போன்ற சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், தங்கள் வீடுகளை சுற்றியும் காலி நிலங்கள் உள்ளதால் அங்கு இரவு நேரங்களில் மது அருந்துபவர்கள் அதிகமாக உள்ளதால், அவர்களில் ஒரு குழுவினர் தான் இது போன்று செய்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
 
கொள்ளையர்கள் நடமாட்டம் குறித்த சிசிடி காட்சிகள் தற்பொழுது இணையதளத்தில் அதிகமாக வைரலாகி பரவி வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்