வெளிநபர்களை அனுமதிக்க கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உள்துறை செயலாளர் உத்தரவு..!

Siva

ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (21:35 IST)
வெளிநபர்களை கல்வி நிறுவனங்களுக்குள் அனுமதிக்க கூடாது என உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்குள் வரும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பல்கலைக்கழக நிர்வாகங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளி நபர்கள் பணியாளர்கள் குறித்து பதிவு கட்டாயம் பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
வேலை நிமித்தமாக வரும் எலக்ட்ரீசியன் பிளம்பர்கள் உள்ளிட்டோர் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்றும் சம்பந்தம் இல்லாத வெளிநபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் என்றும் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்