மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:57 IST)
தமிழகத்தில் மீண்டும் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதை தொடர்ந்து மற்ற மாணவிகளுக்கும் கொரொனா சோதனை செய்யப்பட்டதில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 11 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்