சமூக வலைதளப் பிரபலம் மண்ணை சாதிக் கைது – ஏன் தெரியுமா ?

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (13:35 IST)
சமூக வலைதளங்களில் பிரபலமாக இருக்கும் மண்ணை சாதிக் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் பற்றி தவறாக பதிவிட்டதாக சொல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆர்வமாக இருப்பவர்களுக்கு மண்ணை சாதிக் பற்றி தெரியாமல் இருக்காது. அந்த அளவுக்கு பிரபலமான அவர் சினிமா நடிகை ஹன்சிகா மோத்வானியைக் காதலிப்பதாக சொல்லி அடிக்கடி டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வீடியோக்களைப் போட்டு வருபவர். அது மட்டும் இல்லாமல் சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இவர் தெலங்கானாவின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தர்ராஜனைப் பற்றி சமூக வலைதளத்தில் தவறாக சித்தரிக்கும் விதமாக புகைப்படத்தை பதிவிட்டதால் அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை திருச்சி மத்திய சிறையில் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்