சிறுவனின் ஸ்கேனைப் பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள் – எப்படி போனது இத்தனை ஊசிகள் ?

வெள்ளி, 6 மார்ச் 2020 (08:21 IST)
தெலங்கானாவில் 3 வயது சிறுவன் ஒருவனின் உடலில் 15க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வீபநகந்தலா எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் அசோக் மற்றும் அன்னபூர்னா. இவர்களுக்கு 3 வயதில் லோகநாதன் என்ற வயது மகன் இருக்கிறான். குழந்தை கடந்த சில நாட்களாக எதுவும் சாப்பிடாமல் சோகமாக இருந்துள்ளான்.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் குழந்தைக்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அவனது உடலில் இடுப்புக்குக் கீழ் 15 க்கும் மேற்பட்ட ஊசிகள் இருந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஊசிகளை எடுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் சில ஊசிகளை அவர்கள் எடுத்துள்ளனர்.

மீதமுள்ள ஊசிகளை சிறுவன் உடல்நலம் தேறியதும் எடுக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்