நண்பனையே கொலை செய்த கொடூரன்… பதற வைக்கும் முக்கோணக் காதல் கதை!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (16:50 IST)
திண்டுக்கல் அருகே நண்பர்கள் இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்து வந்துள்ள நிலையில் ஆத்தரம் தாங்காமல் நண்பனையே கொலை செய்துள்ளார் அஜித் என்ற வாலிபர்.

திண்டுக்கல் அருகே சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தன் நண்பர் அஜித் என்பவருடன் இணைந்து வெல்டிங் கடை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே பெண்ணைக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் அந்த வீட்டாரை அணுகி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் வாங்கியுள்ளார்.

இதனால் அஜித், மணிகண்டன் மேல் கோபத்தில் இருந்துள்ளார். இதையடுத்து தனது நண்பரகளை சேர்த்துக்கொண்டு மணிகண்டனை காட்டுக்குள் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார். அப்போது போதை அதிகமான மணிகண்டனை மது பாட்டில்களை உடைத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

உடலெங்கும் ரத்தம் சொட்ட ஊருக்குள் வந்த அஜித்தை மக்கள் பிடித்து தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விவரம் அறிந்து வந்த போலிஸார் அஜித்தைக் கைது செய்து மணிகண்டனின் உடலைக் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்