மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளி! கூவத்தில் சடலமாக மீட்பு!

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (07:59 IST)
கோப்புப் படம்

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த புருஷோத்தமன் கூவம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகள் தப்பியோடுவதும் பின்னர் அவர்களை அதிகாரிகள் தேடிச் சென்று அழைத்து வருவதும் வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. இந்நிலையில் ஜூன் 13 ஆம் தேதி கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த புருசோத்தமன் என்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் 15 ஆம் தேதி அவர் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து அவரை மருத்துவமனை ஊழியர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று ருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள கூவம் ஆற்றில் அவரின் சடலத்தை மீட்டுள்ளனர். அவரது மரணம் தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்