கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு இன்று வரை வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிகள், சட்டப்பேரவை தொடங்கியவுடன் ஆளுநர் ஆனந்திபென் உரையாற்றிய போது திடீரென "கோ பேக் கவர்னர்" என்று முழக்கங்கள் எழுப்பினர்.
சமாஜ்வாதி ஜனதா கட்சி எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சேர்ந்து இந்த முழக்கத்தை எழுப்பியதால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. கும்பமேளா விபத்துக்கு மாநில பாஜக அரசின் நிர்வாக தோல்வியே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதற்கு பதில் சொல்ல முடியாமல் கவர்னர் அமைதியாக இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளே எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.