கடந்த ஞாயிறன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் பாலிவுட் திரையுலகில் உள்ள சல்மான்கான் உள்பட முக்கிய பிரமுகர்கள் தான் அவருடைய தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தை விஜய்சேகர் குப்தா மற்றும் ஷாமிக் மெளலிக் ஆகிய இருவரும் இணைந்து இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க சுஷாந்த் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படம் அல்ல என்றும் அவரது திரையுலக வாழ்க்கையை மட்டம் தட்ட நினைத்தவர்கள் மற்றும் அவருக்கு எதிராக சதி செய்தவர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டு அது குறித்த கதையம்சம் கொண்டது தான் இந்த படம் என்று ஷாமிக் மெளலிக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்