நீட் தேர்வுக்கு பதிலா சீட் தேர்வு; மத்தியில் கூட்டாட்சி! – மநீம தேர்தல் அறிக்கை!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (11:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி,

ஊழலற்ற மக்கள் நலன் பேணும் நல்லாட்சி அமைக்கப்படும்

விவசாயம் மற்றும் தொழில் உற்பத்தி மற்றும் சேவை துறை வளர்ச்சியை 20 சதவீதம் உயர்த்துதல்

தனிநபர் வருமானத்தை 7 முதல் 10 லட்சமாக உயர்த்துதல்

நதிநீர் இணைப்பு, அதி திறன் நீர்வழிச்சாலை, தண்ணீர் மேலாண்மை மற்றும் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்குதல்

மீனவர்கள் வாழ்வாதார மேம்பாடு, ஆழ்கடல் மீன்பிடி பொருளாதார வளர்ச்சி

தமிழக அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மருத்துவ நுழைவு தேர்வாக SEET தேர்வு முறையை கொண்டு வருதல்

மத்தியில் கூட்டாட்சி அமைத்து மத்திய அரசின் நலன்களை பெறுதல்

ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்