உதவித் திட்டங்களுடன் மெஜஸ்டிக் லயன்ஸ் புதிய நிர்வாகிகள் பணியேற்பு !

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (21:37 IST)
கருவூர் ஹோட்டல் அர்ச்சனா கூட்ட அரங்கில் மெஜஸ்டிக் தலைவர் ஆறுமுகசாமி தலைமை ஏற்க , தமிழ் கலாட்சார மேம்பாட்டு துறை மாவட்டத் தலைவர் மேலை பழநியப்பன் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்டத் தலைவரும் சாசனத்தலைவருமான பரமேஸ்வரி எம். செல்வராஜ் முன்னிலை வகித்தார்
 
மாவட்டம் 324 ஏ2 அரிமா மாவட்ட முதல் துணை ஆளுனர் சேதுகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய தலைவராக சிவி.குமாரதாஸ், செயலர் ஆக பி.கார்த்திகேயன் பொருளராக அகல்யா மெய்யப்பன் உள்ளிட்ட குழுவினரை பணியமர்த்தினார்
 
மூன்று சக்கர சைக்கிளை சித்தார்த் தாமுதியோர் இல்லத்திற்கும், நாப்கின் எரியூட்டியை சி.எஸ்.ஐ. பள்ளிக் கும்' 100 கிலோ அரிசியை ஓங்காரக் குடில் அன்னதான திட்டத்திற்கும் வழங்கினார்.
 
மாவட்டத் தலைவர் ஏ.ஆர் கே.சேது சுப்பிரமணியன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்
 
மூத்த அரிமா எஸ்.எஸ்.வேல் மாவட்டத் தலைவர்கள் சுமங்கலி செல்வராஜ், முசிறி காமராஜ், கே.மனோகரன்
 
சி பகுமார், வட்டாரத் தலைவர்கள் குமார், முருகேசன், வக்கீல் கரிகாலன் ஜெயா பொன்னுவேல், லயன் மல்லிகா, நல்ல கருப்பன் வைஷ்ணவி மெய்யப்பன் பேங்க் சுப்பிரமணி, நல்ல கருப்பன் அருணாசலம்
 
கருவூர் அரசு கலைக் கல்லூரி லியோ மாணவ மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்