மத்திய அரசு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி தமிழக அரசுக்கு,3 நாட்களில் நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பு செய்து திருப்பி அனுப்பியதாகவும், இந்த தகவலை தமிழக அரசு இரண்டு ஆண்டுகளாக எந்த பொதுத்தளத்திலும் ஏன் வெளியிடவில்லை எனவும் உயர்நீதிமன்றனம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் விலக்கு மசோதாவை பற்றி மக்கள் பரவலாக பேசி வந்த நிலையிலும் தமிழக அரசு மௌனம் காத்தது ஏன்? எனவும், புதிய மசோதா நிறைவேற்ற விதிகள் இருந்தும் தமிழக அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.