சென்னை எழும்பூர் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் பகல் 12:30 முதல் 2 மணி வரை ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு செல்லும் நான்கு ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு - கடற்கரை இடையே செல்லும் ஐந்து ரயில்களும் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.