எந்த போராக இருந்தாலும் அமெரிக்காவுடன் மோத தயார்: சீனா அதிரடி அறிவிப்பு..!

Mahendran

புதன், 5 மார்ச் 2025 (16:54 IST)
வர்த்தகப் போர் உள்பட எந்தவிதமான போராக இருந்தாலும் அமெரிக்காவை சந்திக்க தயார் என்று சீனா அறிவித்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, சீனா, மெக்ஸிகோ, கனடா ஆகிய நாடுகளுக்கு வரிகளை அதிகம் போட்டார். மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலளித்துள்ள சீன தூதரகம், "அமெரிக்கா உண்மையிலேயே தீர்வு காண விரும்பினால், அதற்கு சரியான வழி மற்றவரை சமமாக நடத்த வேண்டும். ஒருவேளை அமெரிக்கா வரி விதிப்பு, வர்த்தக போர் உள்பட எந்த வகையான போராக இருந்தாலும் அதை நடத்த விரும்பினால், அந்த போரை நாங்களும் சந்திக்க தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
 
"எங்கள் நாட்டின் நலன்களை பாதுகாக்க, சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது அவசியம். அமெரிக்கா விவகாரத்தை பொருத்தவரை, அமெரிக்கா மக்கள் மீதான மனிதாபிமான மற்றும் நல்லெண்ண  அடிப்படையில், அமெரிக்காவுடன் இணைந்து நாங்கள் நடவடிக்கை எடுக்க முயற்சித்தோம். ஆனால், அந்த முயற்சிகளை அங்கீகரிப்பதற்கு பதிலாக, எங்கள் மீது பழி போடுகிறது. சீனாவை அழுத்த முயற்சி செய்கிறது. அதற்கு இடம் கொடுக்க மாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளது.
 
இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்