கோவில் நிகழ்ச்சிகளில் சினிமா பாட்டுக்கு தடை! - நீதிமன்றம் உத்தரவு!

Prasanth Karthick

புதன், 5 மார்ச் 2025 (15:43 IST)

கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், திருவிழாக்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்ப சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும்போது இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் சினிமா பாடல்களும் பாடப்படுவது வழக்கமாக உள்ளது.

 

இந்நிலையில் சமீபத்தில் புதுச்சேரி திருமலையராயன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்மிக தலங்களில் சினிமா பாடல்கள் பாடுவது, ஒலிபரப்புவது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, கோவில்களில் நடத்தப்படும் இசைக்கச்சேரிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் என்றும், சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்