இது தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் வந்த நிலையில், அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தது. இதில், விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ.28 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் 19ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, விசாரணையை ஒத்திவைத்துள்ளது.