பஞ்சாப் மாநிலத்தில் தியானம் செய்ய வந்த கெஜ்ரிவால்.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

Mahendran

புதன், 5 மார்ச் 2025 (16:01 IST)
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் 10 நாட்கள் தியானம் செய்யப் போவதாகக் கூறி கெஜ்ரிவால் வந்த நிலையில் அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் டெல்லியில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், தற்போது பஞ்சாப் மாநில அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஹோசியார்பூர் என்ற மாவட்டத்தில் தியானம் செய்ய கெஜ்ரிவால் வருகை தந்தார்.
 
தியானம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுமிதா கெஜ்ரிவால்  நேற்று இரவு பஞ்சாப் வந்தனர். ஹோசியார்பூர் என்ற பகுதியில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகைக்குச் செல்ல அவர், உயர்தர வாகனங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாப் போலீசாரின் பாதுகாப்புடன் 30 வாகனங்களில் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தியானம் செய்வதற்காக மகாராஜா போல் செல்கிறார் என்றும், பஞ்சாப் மக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு பிரமாண்டமாக செலவு செய்ய வேண்டுமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்