பிரதமரை ஒருவாரம் தொந்தரவு செய்துள்ளது, அது தான் கருப்பு: சு.வெங்கடேசன் டுவிட்

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:16 IST)
எதிர்கட்சிகள் கருப்பு ஆடை அணிந்தது பிரதமரை ஒரு வாரம் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது என்றும் அதுதான் கருப்பின் சக்தி என்றும் மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றபோது ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் கருப்பு உடையில் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பிரதமர் நேற்று கடுமையான விமர்சனம் செய்தார்
 
கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் வந்து ஒரு வாரம் கழித்து பிரதமர் விமர்சனம் செய்ததை அடுத்து இதுகுறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 
கருப்பு ஆடை அணிந்து
போராடியவர்களை வசைமாரி பொழிந்திருக்கிறார் பிரதமர்.
 
ஒரு வாரம் ஆகிவிட்டது.
போராடிய எல்லோரும் தொகுதிகளுக்கு வந்துவிட்டோம்.
 
ஆனாலும்…
பிரதமர் என்றும் பாராமல்
கருப்பு அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்திருக்கிறது.
 
அது தான் கருப்பு.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்