கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (20:28 IST)
கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என்று அதிரடியாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
 
 கோயில்களில் ஒரு சிலருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு வரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கோவில்களில் வரும் பக்தர்கள் அனைவரும் சமம் என்றும் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ அல்லது தலைப்பாகை அணிவிப்பதோ குடை பிடிப்பதோ செய்யக்கூடாது என்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
கோவில் நிலையில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்