ஹெலிகாப்டரில் மதுரையை சுற்ற ரூ.5000: இன்று முதல் புதிய வசதி!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:09 IST)
ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதி இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹெலிகாப்டரில் பறக்க மதுரை மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
 ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை டிசம்பர் 18 முதல் அதாவது இன்று முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது
 
இந்த வசதியை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 
மதுரையை ஹெலிகாப்டரில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிபார்க்க ஒரு நபருக்கு ரூபாய் 5000 கட்டணம் என தகவல் வெளியாகி உள்ளது 
 
இதனை அடுத்து மதுரையின் அழகை ஹெலிகாப்டரில் இருந்து சுற்றிப்பார்க்க பலர் முன்பதிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்