காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (16:04 IST)
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்!
காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் இரண்டு இயந்திரத்தை தமிழக அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.
 
வண்டலூர் பூங்காவில் தனியார் நிறுவனங்களின் உதவியின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் நிறுவப்பட்டது. இந்த இயந்திரத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்
 
இந்த இரண்டு இயந்திரங்களில் இருந்து தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் காற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என்றும் அதை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காகவும் பூங்காக்களில் உள்ள வன விலங்குகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் இயந்திரம் திறக்கப்பட்டதை அடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தண்ணீர் பிரச்சினை தீர்ந்து விட்டதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்