மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி தொடக்கம்.. 2026ல் திறக்க முடிவு.. சுறுசுறுப்பாக நடக்கும் வேலை..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (09:29 IST)
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு விட்டதாகவும் சுறுசுறுப்பாக வேலை நடந்து விட்டு வருவதாகவும் 2026 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் அதன் பிறகு இடம் தேடும் பணி, ஜப்பானிலிருந்து வாங்கப்படும் கடன் உள்ளிட்ட பணிகள் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க காலதாமதம் ஆனது

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இந்த மருத்துவமனை பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இது குறித்து திமுக மற்றும் பாஜக இடையே கடும் மோதல்களும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது ரூ.1977 கோடி மதிப்பில் கட்டிட பணிகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து 2026 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை திறக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளன

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்