லாரி மீது கார் மோதி கோர விபத்து; குழந்தை உள்பட 6 பேர் பலி! – திருச்சியில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (10:37 IST)
திருச்சியில் திருவாசி அருகே சரக்கு லாரியோடு கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவாசி அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அந்த வழியே ஆம்னி கார் ஒன்றில் சிலர் குடும்பமாக பயணித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் கார் மோதி பயங்கர விபத்திற்கு உள்ளானது. விபத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்து விபத்துக்குள்ளானவர்களை மீட்டதுடன், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணித்த குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையிலேயே நடந்த இந்த கோர விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்