ஜார்ஜ் கோட்டையிலும் காவி கொடி பறக்கும்: பாஜக தலைவர் எல் முருகன்

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (18:51 IST)
தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜார்ஜ் கோட்டையிலும் பாஜகவின் காவி  கொடி பறக்கும் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் எல் முருகன் அவர்கள் பேட்டி அளித்துள்ள பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் இது குறித்து அவர் கூறியபோது ’மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான் என்றும் தமிழக மக்கள் மத்திய அரசுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்
 
மேலும் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். விரைவில் ஜார்ஜ் கோட்டையிலும் பாஜகவின் காவி கொடி பறக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
 
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் அவரிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அவர் விரும்பினால் அவருடன் கூட்டணி வைக்க தயார் என்றும் எல் முருகன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்