கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது கூடங்குளம் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அதிலிருந்து தமிழகத்துக்கு 562 மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 வது அணு உலைக்கான அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது.
எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 வது அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும் பங்கை தமிழகத்துக்கு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.