தமிழக மக்கள் மீது அன்பு இருந்தால் ரஜினி இதை செய்ய வேண்டும்: கே.எஸ்.அழகிரி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (07:39 IST)
தமிழக மக்கள் மீது ரஜினிக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆளுநர் ஆர் எம் ரவி அவர்களை சந்தித்ததாகவும் அரசியல் குறித்து பேசியதாகவும் கூறியிருந்தார்
 
அவருடைய இந்த சந்திப்பு பல அரசியல் கட்சி தலைவர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தமிழக மக்கள் மீது ரஜினிக்கு உண்மையான அன்பு இருந்தால் ஆளுநர் ஆர்.என் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்று கூறினார்
 
நீட்தேர்வு காரணமாக நமது குழந்தைகள் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்