மோடி ஆட்சியில் எல்லாம் திவால் தான்: அழகிரி காட்டம்!

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (15:57 IST)
மத்திய அரசு வங்கிகளை சரியாக நிர்வகிக்கவில்லை  காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். 
 
கடந்த சில மாதங்களாக தனியார் வங்கியான யெஸ் பேங்க் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அந்த வங்கியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. 
 
யெஸ் பேங்க்கினை நிர்வாகம் செய்ய எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி. அவர் கூறியதாவது, 
 
பிரதமர் மோடியின் ஆட்சியில் வங்கிகள் திவால் நிலையை நோக்கி செல்கிறது. பல வங்கிகள் செயல்படாமல் உள்ளது. பல வங்கிகள் பெயருக்கு  இருக்கிறது. இதற்கு காரணம், மத்திய அரசு வங்கிகளை சரியாக நிர்வகிக்கவில்லை. 
 
மேலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து எந்தவித உதவியும், வழிகாட்டுதலும் கிடைக்காததே காரணம். இதற்கெல்லாம் மத்திய அரசின் பொருளாதார துறையின்  மிக மோசமான பின்னடைவு தான் காரணம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்