Yes வங்கி நிறுவனர் மீது வழக்குப்பதிவு; வீட்டில் ரெய்டு: அமலாக்கத்துறை அதிரடி!
சனி, 7 மார்ச் 2020 (13:39 IST)
தனியார் வங்கி நிறுவனமான Yes வங்கி ஆர்பிஐயின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதன் நிறுவனர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள தனியார் வங்கிகளில் ஒன்றான யெஸ் வங்கி கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வந்த சூழலில் அதன் கட்டுப்பாட்டை ஆர்பிஐ கையில் எடுத்துள்ளது. மேலும் யெஸ் வங்கிக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட பிறகு அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.