ஓபிஎஸ் அணிக்கு மாறுகிறாரா கேபி முனுசாமி? அவரே அளித்த விளக்கம்!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (16:19 IST)
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருக்கும் கேபி முனுசாமி ஓபிஎஸ் அணிக்கு செல்ல உள்ளதாக வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். 
 
எடப்பாடிபழனிசாமி அணியில் இருக்கும் கேபி முனுசாமிக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது/ சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி சென்றபோது கேபி முனுசாமியை அழைத்து செல்லாமல் சிவி சண்முகத்தை அழைத்துச் சென்றார்
 
இதனால் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று கேபி முனுசாமி தரப்பு நினைத்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கேபி முனுசாமி, ஓ பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்
 
வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில நாட்களாக ஓய்வு எடுத்து வருகிறேன் என்றும் கட்சிப் பணிக்கு செல்ல முடியவில்லை என்றும் என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது என்றும் அணி மாறிக் கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போக வில்லை என்றும் ஓபிஎஸ் அணிக்கு கண்டிப்பாக செல்ல மாட்டேன் என்றும் அவர்கள் .
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்