முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. தீ விபத்தால் பலியான சோகம்..!

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (08:09 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் கே பி அன்பழகன் மருமகள் தீ விபத்தால் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன். இவரது மருமகள் 30 வயது உள்ள பூர்ணிமா என்பவர் கடந்த 18ஆம் தேதி தீ விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டு நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார். தர்மபுரி பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் விளக்கு ஏற்றும் போது தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்ததை அடுத்து அதிமுகவினர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்