தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: 5 பேர் கொண்ட குழு அமைத்தது அதிமுக..!

Siva

திங்கள், 22 ஜனவரி 2024 (11:35 IST)
மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தல் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. 
 
ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் குழு என அமைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. 
 
இந்த குழுவில் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி வேலுமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் செம்மலை, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
தேர்தல் களத்தில் இறங்க அதிமுகவும் தயாராகிவிட்டது என்பதையே இந்த அறிவிப்பு காட்டுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்