மூடப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி; கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு! – மக்களுக்கு எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (12:27 IST)
சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில் கொசஸ்தலை ஆற்று கரைப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிவர் புயலால் கனமழை பெய்து வந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் கொள்ளளவை எட்டியதால் மதகுகள் திறக்கப்பட்டன. நேற்று மதியம் முதலாக செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடையாறு ஆற்றின் கரைப்பகுதி உடைந்து குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆந்திராவின் அம்மம்பள்ளி அணையிலிருந்து 1100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருத்தணி, பள்ளிப்பட்டு சுற்றுவட்டாரங்களில் ஆற்று கரைப்பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்