மாணவனை தள்ளிக்கொண்டு வந்து சென்னையில் உல்லாசம் - கேரள ஆசிரியை கைது

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (11:53 IST)
கேரளாவில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை  ஆசை வார்த்தை கூறி சென்னக்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்த 40 வயது கேரள ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

 
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் பெரோனா. இவர் அதே பள்ளியில் படித்த 10ம் வகுப்பு படித்த ஒரு மாணவனுடன் நெருங்கி பழகியுள்ளார். 
 
இந்நிலையில், கடந்த 23ம் தேதி அந்த மாணவன் காணாமல் போய்விட்டார். எனவே, மாணவனின் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். 
 
இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர். அதில், சென்னையில் சூளைமேடு பகுதியில் ஆசிரியை இருப்பது தெரிய வந்தது. எனவே, அங்கு வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
 
விசாரணையில், கணவரிடம் விவாகரத்து பெற்ற வந்த ஆசிரியைக்கு அந்த மாணவனை மிகவும் பிடித்துவிட, அவருடங் நெருங்கி பழகியுள்ளார். அதன் பின் ஆசை வார்த்தை கூறி மாணவனை சென்னைக்கு அழைத்து வந்து அவருடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்