இதுதாங்க தமிழ்கலாச்சாரம்: புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ வைத்த கஸ்தூரி

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (10:13 IST)
யாரென்றே தெரியாத நபர்களுக்கு உதவி செய்வது தான் தமிழ் கலாச்சாரம் என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
 
நடிகை கஸ்தூரி சமீப காலமாக சினிமா, அரசியல் என பல்வேறு சமூக விஷயங்கள் பற்றி ட்விட்டரில் கருத்து கூறி வருகிறார். இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும், அவரை அசிங்கமாக திட்டி வசை பாடினாலும், மனம் தளராத கஸ்தூரி, தொடர்ந்து பல அரசியல் நகர்வுகளையும், சினிமா குறித்தான தனது கருத்துக்களையும் டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் கஸ்தூரி, டிவிட்டரில் யாரென்றே தெரியாத ஒரு சாமானியர், சகோதரர் பிரஷாந்துடன் லிஃப்ட் கேட்டு சென்றுகொண்டிருக்கிறேன். இதுதான் சென்னை. யாரென்றே தெரியாவதவர்களுக்கும் உதவுவது தான் தமிழ் கலாச்சாரம்,  என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்