அருள்மிகு கரூர் மாரியம்மன் கோயில் திருவிழா மே 8 ஆம் தேதி கம்பம் நடுதல் விழாவுடன் தொடங்கியது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்று கரூர் மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் , ஒவ்வொரு வருடமும் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா, மே 8 ஆம்தேதி கம்பம் நடுதல் விழாவுடன் தொடங்கியது. கண்ணைக்கவரும் திருவிழாவான பூச்சொரிதல் விழா மே 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடியவிடிய நடைபெறுகிறது.
அடுத்து, மே 23 ம் தேதி மற்றும் 24 ஆம் தேதிகளில் அக்னிசட்டி எடுத்துவருதல், அலகு குத்துதல் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் மிக முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு செல்லும் விழா மே 25 ஆம் தேதி புதன்கிழமை மாலை நடைபெறுகிறது.
அருள்மிகு மாரியம்மன், மாவடி ராமசாமி, வலங்கியமன் சவாமி வீதிஉலா தினமும் நடைபெறும். கோயில் விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துக்கருப்பன் என்ற முத்துக்குமார் மிகச் சிறப்பாக செய்து வருகிறார்.