சீவலப்பேரி பாண்டியின் வாரிசு நாங்கள்: பஞ்ச் டைலாக் பேசிய கருணாஸ்; ஒரே அமுக்காய் அமுக்கிய போலீஸ்

Webdunia
ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (09:35 IST)
சென்னையில் கைது செய்யப்பட்ட கருணாஸ், நாங்கள் சீவலப்பேரியின் வாரிசு கைது நடவடிக்கைக்கு எல்லாம் பயப்படமாட்டோம் என பஞ்ச் டைலாக் பேசியுள்ளார்.
சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  கருணாஸ் கோபத்தில் ஆக்ரோஷமாக பேசினார். 
 
தி.நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.  அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவர் கடுமையாக விமர்சித்தார். மேலும் தனது ஜாதிப் பெருமையை இஷ்டத்திற்கு அளந்து பேசினார்.
 
இதையடுத்து கருணாஸின் மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவதூறாக பேசுவது, மிரட்டுவது, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டிற்கு சென்ற, நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையிலான போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். 
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், இந்த கைது நடவடிக்கைக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல, துப்பாக்கிக்கு நெஞ்சை நிமிர்த்தி காட்டிய சீவலப்பேரி பாண்டியின் வாரிசு நாங்கள். வழக்கை நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்கிறேன் என கருணாஸ் ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்