வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து! எங்களுக்கு வெற்றி! – கருணாஸ் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (13:33 IST)
வன்னியர் சமூகத்திற்கான உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை கருணாஸ் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வன்னியர் பிரிவினருக்கான 10.5சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் உள்ஒதுக்கீடை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை தொடர்ந்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை தற்போது விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை இடஒதுக்கீடுக்கு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஏமாற்றமளிப்பதாக பாமக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தி இந்த தீர்ப்பை வரவேற்பதாக முன்னாள் எம்.எல்.ஏவும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் வரவேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இடஒதுக்கீடை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் மூலம் உண்மையான சமூகநீதிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்