பேரக் குழந்தையோடு விளையாடும் கருணாநிதி - வைரல் வீடியோ

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2017 (13:39 IST)
திமுக தலைவர் கருணாநிதி தனது கொள்ளுப்பேரனோடு கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


 

 
முதுமை மற்றும் உடல் நலக்குறைபாடு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து கருணாநிதி ஒதுங்கியிருக்கிறார். அவ்வப்போது அவரின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் குறித்து வதந்திகள் பரவும் போது புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர்.
 
சமீபத்தில், திமுகவின் 15-வது அமைப்பு தேர்தலையொட்டி, கட்சியின் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு, தன்னை மீண்டும் உறுப்பினராக புதுப்பித்துக்கொண்ட புகைப்படம் திமுக சார்பில் வெளியிடப்பட்டது.
 
இந்நிலையில், அவரின் மகன் தமிழரசு தனது பேரக்குழந்தையை கருணாநிதியிடம் காண்பிக்க வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், அந்த குழந்தையை கண்டு அவர் சிரிப்பதும், அந்த குழந்தை அவருடன் விளையாடுவதும் பதிவாகியுள்ளது. 
 
அவருக்கு அருகில் அவரது மனைவி தாயாளு அம்மாள், மகள் செல்வி ஆகியோர் உள்ளனர். இந்த வீடியோ திமுகவினரால் சமூக வலைத்தளஙக்ளில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்