கருணாநிதியின் முதல் தொகுதிக்கு வந்த சோதனை !!

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (19:28 IST)
கரூர் மாவட்டம்., குளித்தலை என்றாலே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது., முன்னாள் மறைந்த முதல்வரும், முன்னாள் தி.மு.க தலைவருமான கருணாநிதியை முதன் முதலில் சட்டப்பேரவைக்கு அனுப்பிய தொகுதி என்ற பெயர் இன்றும் உள்ளது

மேலும், தற்போதும், குளித்தலை சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ தி.மு.க வினை சார்ந்த ராமர் என்ற நிலையிலும், அவர் இருந்தும் இல்லாத நிலை தான்., அத்தொகுதி மக்களுக்கு இன்றுவரை அ.தி.மு.க அரசினால் வஞ்சிக்கப்படுவதாக தி.மு.க எம்.எல்.ஏ ராமர் அப்பகுதி மக்களிடையே பேசி வரும் நிலையில் அப்பகுதிக்கு ஒரு புதிய பேருந்து நிலையம் இன்றுவரை வருவதற்காக பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கியும் இதுவரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் செவிசாய்க்க வில்லை.
 
கரூர்  மாவட்டம்.,  குளித்தலையில்  நிரந்தர  புதிய  பேருந்து நிலையம்  அமைக்க  பல  வருடங்களாக நடவடிக்கை  எடுத்து  வராத நகராட்சி நிர்வாகத்தின்  அலட்சியப் போக்கால் நொந்துபோன அப்பகுதி நகரப் பகுதி  மக்கள்  சமூக  ஆர்வலர்கள்  என  பல  துறைச் சார்ந்து  மனுக்கள்  அளித்தும்  எந்தவொரு  நடவடிக்கை  எடுக்கவில்லை  என்பதால் அப்பகுதியை  சேர்ந்த  பள்ளி  சிறுவர் - சிறுமிகள்  கொண்டு  மனுக்களை சமூக  ஆர்வலர்கள்  குளித்தலை  நகராட்சி  அலுவலகத்தில்  நகராட்சி பொறியாளர்  கார்த்திகேயனிடம்  கொடுத்தனர்.

ஏற்கனவே  புதிய பேருந்து நிலையம்  அமைக்க  நடவடிக்கை  எடுத்து வருவதாக  குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்