திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 31 ஜனவரி 2018 (22:19 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

பல் வலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதி தேனாம்பேட்டை பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பல் வலிக்கான சிகிச்சை செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சில நிமிடங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்கள் கூறுகையில் இன்னும் ஒருசில நாட்களில் கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிக்க உள்ளதாகவும்,. இதன் காரணமாக பல் சுத்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். திமுக தொண்டர்கள் கருணாநிதியின் கணீர் குரலை கேட்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்