சர்ச்சுக்கு வரும் பெண்கள் டார்கெட்; வலையில் வீழ்த்தி பாலியல் தொல்லை! – குமரியை உலுக்கிய பாதிரியார்!

Webdunia
வியாழன், 16 மார்ச் 2023 (09:36 IST)
கன்னியாக்குமரியில் இளம் பாதிரியார் ஒருவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் 27 வயதான இளம் பாதிரியார் ஒருவர் சேவை செய்து வந்துள்ளார். சமீபத்தில் ஒரு பெண்ணுக்கு இந்த பாதிரியார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. அதற்கு சில நாட்களுக்கு பின் திருமணம் செய்து வைத்த அந்த பெண்ணோடு பாதிரியார் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த பாதிரியார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் நர்சிங் மாணவி ஒருவர், மற்றொரு பெண் என பலர் பாதிரியார் மீது காட்டத்துறை, பேச்சிப்பாறை காவல் நிலையங்களில் பாலியல் புகார் அளித்துள்ளனர். அதில் தேவாலயத்திற்கு வரும் இளம் பெண்களிடம் நைச்சியமாக பேசி நம்பர் வாங்கி பாதிரியார் தனது பாலியல் சீண்டல்களை செய்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் பாதிரியாரை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்